பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

சிங்கப்பூர்: கம்பார்ட்டெல்கிரோ நிறுவனமும் (CDG) நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இணைந்து நேற்று (ஜூன் 19) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

CDG நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் புங்கோல் குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் கட்டணமில்லா டாக்ஸியில் பயணம் செய்யலாம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலவச சேவை எந்தெந்த நாட்களில் இருக்கும்?
இந்த இலவச டாக்ஸி தேவையானது தினம் தோறும் வழங்கப்படும்.

யாருக்கு முன்னுரிமை?
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் குழுக்கள், குடும்பங்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போது முதல் இந்த திட்டம் ஆரம்பம்?
ஜூன் 22 ஆம் தேதி முதல் இலவசமாக அனைவரும் டாக்ஸியில் பயணம் செய்யலாம்.

இந்த தானியங்கி வாகனத்தின் பயண பாதையானது சுமார் 25 நிமிடங்கள் இருக்கும். பொங்கோல் நார்த் சோர் டிரைவ் பிளாக் 420 எ பொங்கோல் கோஸ்ட் மால் ஒன் பொங்கோல் (சம் கீ LRT நிலையம்) ஆகியவற்றின் வழியே செல்லும்.

இதற்கு அடுத்ததாக ஜூலை மாதத்தில் 50. நிமிடங்கள் கொண்ட நீண்ட ஒரு பயண பாதையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக CDG நிறுவனம் கூறியுள்ளது.

இந்த இலவச பயணம் செல்ல விரும்பும் அவர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது எப்படி?
இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் https://zig.sg/driverless என்ற இணையதளம் வழியாக முன்னதாகவே பதிவு செய்தல் அவசியம் ஆகும்.

கம்ஃபர்ட்டெலிகிரோவின் 5 இருக்கைகள் கொண்ட தானியங்கி வாகனங்கள், சீனாவின் ‘Pony.ai’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

தற்போதுள்ள விதிமுறைகளின் படி அவசர காலங்களில் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எப்போதும் வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதில் பயணம் செய்ய சிலருக்கு மட்டுமே CDG அழைப்பு விடுத்திருந்தது அதன் ஒரு பகுதியாக பொங்கோல் குடியிருப்பாளர்களும் அடித்தள தலைவர்களும் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்துள்ளனர். தற்போது பொதுமக்களும் அதில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK