2026 இல் எளிமையாக சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி?

2026 இல் எளிமையாக சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி?

இந்தப் பதிவில் நீங்கள் 2026 இல் சிங்கப்பூரில் class 3 டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி என்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் மற்றும் அதற்கான வழிமுறை என்ன என்று பார்க்கலாம்.

தற்பொழுது சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

அதற்கான வழிமுறையும் பல பேருக்கு தெரியவில்லை. இந்த பதிவில் சரியான வழிமுறை என்ன என்று நாம் பார்க்கலாம்.

புக்கிட் பாடோக்(Bukit Batok) டிரைவிங் ஸ்கூலில் நீங்கள் நேரடியாக class 3 லைசன்ஸ் எடுப்பதற்கு முதலில் அப்பாயிண்ட்மெண்ட் போட வேண்டும்.

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நீங்கள் நேரடியாக அங்கு செல்ல வேண்டும்.

நீங்கள் அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என்றால் உங்களுக்கான கணக்கை(Account) துவங்குவதற்கு 250 டாலர் செலவாகும்.

நீங்கள் தனியார் ஓட்டுநரை அணுகுவதென்றால் அதற்கு 150 டாலர் கணக்கு(Account) ஓபன் பண்ண செலவாகும்.

தனியார் பயிற்சி ஓட்டுனரை உங்களுக்கு தெரிந்தால் மட்டும் நீங்கள் அதற்கு முயற்சி செய்ய முடியும் இல்லையெனில் அங்கேயே எடுப்பது சிறந்தது.

உங்களின் கணக்கு(Account) திறந்தவுடன் உங்களுக்கு அதற்கான ஐடி(🆔)மற்றும் பாஸ்வேர்ட்(Password) கொடுத்து விடுவார்கள். அதன் மூலம் நீங்கள் உங்களுடைய கிளாஸ்களை(Class) புக் பண்ண ஆரம்பிக்கலாம்.

முதலில் நீங்கள் சரியான முறையில் விரைவாக லைசன்ஸ் எடுப்பதற்கு சிறந்த வழி பேசிக் தியரி மற்றும் பைனல் தியரியை உங்களுடைய போனில் ஜூம் கிளாஸ்(Zoom Class) மூலம் முடித்து விடவும்.

பிறகு பேசிக் தியரி Evaluating மற்றும் பேசிக் தியரி எக்ஸாமை முடித்துவிட்டு, பிறகு Final theory Evaluation அதன் பிறகு Final theory exam முடித்து விடுங்கள்.

நீங்கள் PDL அப்ளை செய்ய வேண்டும். PDL என்பது நீங்கள் வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள தேவைப்படும் ஒன்றாகும். இது இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இதற்கு 25 டாலர் வரை செலவாகும்.

பிறகு நீங்கள் உங்களுடைய பிராக்டிகல் கிளாசை புக் செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொரு கிளாஸ்களுக்கும் பணம் மாற்றாமல் மொத்தமாக 25 கிளாஸ்கள் வரை பணத்தை மாற்றி புக் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு பிராக்டிகல் கிளாஸ் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

நீங்கள் மொத்தமாக உங்களுடைய கிளாஸ் புக் பண்ணினால் மட்டுமே உங்களால் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முடியும்.

நீங்கள் அதிகமான கிளாசை புக் பண்ணி வைத்தால் அதற்கு கம்மியான கிளாஸ்களில் முடித்து விட்டால் நீங்கள் அந்த கிளாசை கேன்சல் செய்து கொள்ளலாம். அதற்கான பணமும் உங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும்.

நீங்கள் பிராக்டிகல் கிளாஸை மொத்தமாக முடித்துவிட்டு அதன் பிறகு சிமுலேட்டர்(simulator) கிளாசை புக் செய்வது சிறந்தது.

சிமுலேட்டர் கிளாஸை முடித்த பிறகு, டிராபிக் போலீஸ் சிமுலேட்டர் கிளாஸ் முடிக்க வேண்டும். இதில் மூன்று கிளாஸ் இருக்கும். அதையும் முடித்து விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் பிராக்டிகல் எவாலிவேஷனில்(Evaluation) பாஸ் செய்ய வேண்டும்.

இறுதியாக நீங்கள் பைனல் எக்ஸாமை செய்தீர்கள் என்றால் நீங்கள் நல்லபடியாக வண்டி ஓட்டும் பட்சத்தில் எளிமையாக டிரைவிங் லைசென்ஸ் எடுத்து விடலாம்.

இதில் நீங்கள் இடையில் ஏதாவது தவறு செய்தால் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

தற்போதைய நிலவரப்படி நீங்கள் சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு அதுவும் நேரடியாக எடுப்பதற்கு 2600 டாலர் வரை செலவாகிறது.

இவை அனைத்தும் சிங்கப்பூரில் வேலை செய்யும் நமது வாசகர் நமக்கு அளித்த தகவலின் படி நாம் தெரிவிப்பதாகும்.

இந்த செலவுத் தொகை என்பது மாறுவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு நமது இணையதளமான www.sgtamilan.com பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK