கடத்தல் வழக்கை முறியடித்த ICA மற்றும் சுங்கத்துறை..!! LED விளக்குகள் இருக்கும் அட்டைப்பெட்டிக்குள் இருந்தது என்ன..??
சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சுங்கத்துறையும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 21 அன்று பாசீர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் சுங்க அதிகாரிகள் 20 அடி நீளம் உள்ள உள்வரும் கொள்கலம் ஒன்றை சோதனையில் ஈடுபட்டு இடைமறித்தனர். அதற்குள் 9,000 அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அந்தக் கொள்கலன் முதலில் ஸ்மார்ட் எல்இடி மின்விளக்குகள் இருப்பதாக கேட்டபோது கூறியுள்ளனர்.
மேலும் தர பகுப்பாய்வு மற்றும் நுழைவுக்கு முந்தைய மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கொள்கலனை மேம்படுத்தப்பட்ட சோதனைக்காக அடையாளம் கண்டனர். அடையாளம் கண்டபோது அதற்குள் கடத்தல் சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன் மதிப்பானது S$1,168,675 மதிப்புகள் வரிகள் ஏய்க்கப்பட்டு இருந்தன. கண்டறியும் திறன்களை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வை தொடர்ந்து பயன்படுத்தப்படும் எனவும் கடத்தல் பொருட்களை தடுப்பதற்காக தனிப்பட்ட முகமைகளுடன் தொடர்ந்து குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும் (ICA) சுங்கத்துறையும் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சுங்கச் சட்டம் மற்றும் கலால் வரிச் சட்டத்தின் கீழ் கடத்தப்பட்ட சிகரெட்டுகளை, வாங்குதல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், விநியோகம் செய்தல், சேமித்து வைத்தல், அதனை கையாளுதல் மிகப்பெரும் குற்றமாகும். மேலும் வரி செலுத்தப்படாத சிகரெட் களை வைத்திருந்தால் வரித்தொகையைப் போல 40 மடங்கு வரை அபராதம் மற்றும் ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.