சிங்கப்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத நுழைவு – ஆறு பேர் கைது..!!

சிங்கப்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத நுழைவு – ஆறு பேர் கைது..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை தேடும் நோக்கில் மரப் படகு மூலம் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக ஆறு இந்தோனேசிய ஆண்கள் மீது இன்று (22.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

சிங்கப்பூர் காவல் படை நேற்று (21.12.25) வெளியிட்ட அறிக்கையின் படி,அதிகாலை சுமார் 00:35 மணியளவில், தனா மேராவுக்கு அருகிலுள்ள சிங்கப்பூர் கடல் பகுதியில் ஆறு ஆண்களை ஏற்றிச் சென்ற மரப் படகை கடலோர காவல்படை கண்டறிந்தது.

மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் படகை நிறுத்தி, அதில் இருந்த ஆறு இந்தோனேசியர்களையும் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் வேலை தேடுவதற்காக படகு மூலம் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 1959 ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) ஐ மீறிய குற்றச்சாட்டின் கீழ், அதாவது சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக, அவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர்களை விரைவாகக் கண்டறிந்து கைது செய்த அதிகாரிகளின் விழிப்புணர்வையும் சிறந்த குழுப்பணியையும் காவல்துறை கடலோர காவல்படை தளபதி மூத்த உதவி காவல் ஆணையர் ஹாங் யோங்ஷெங் பாராட்டினார்.

மேலும், சட்டவிரோத நுழைவு முயற்சிகளை தொடர்ந்து கடுமையாக ஒடுக்கி, நாட்டின் நீர்நிலைகள் மற்றும் கடலோர எல்லைகளின் பாதுகாப்பை உறுதியாகக் காக்க கடலோர காவல்படை தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK