அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி வழக்கு குறித்து ஏப்ரல் 29 சிங்கப்பூர் காவல் துறையினருக்கு புகார் வந்ததாக நேற்று (மே 1) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த மோசடியில் சிக்கியவர்களுக்கு உள்ளூர் தொலைதொடர்பு நிறுவனமான M1 போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவர் அந்த நிறுவனத்தின் மொபைல் தொடர்பு சேவை திட்டத்தில் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட தொலைபேசி எண் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இட வில்லை என கூறிய போது அந்த அழைப்பு பணவியல் ஆணைய அதிகாரிகள் போல நடித்த ஒரு மோசடிக்காரரிடம் மாற்றப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் பணவியல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவரின் மீது விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக அந்த மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை நம்ப வைத்து அவரிடம் பெறப்பட்ட பணமானது சட்டபூர்வமானது என்பதற்கான ஆதாரத்தை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
தொகை தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை நாற்பது வயது மலேசிய நபரிடம் ஒப்படைத்து இருந்தார்.
இது குறித்த விரிவான விசாரணை மற்றும் தொடர் விசாரணை நடந்ததை அடுத்த மோசடி தடுப்பு பிரிவு மற்றும் ஜூரோங் காவல் பிரிவு அதிகாரிகள் அந்த மலேசிய நபரை ஏப்ரல் 30ஆம் தேதி கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் ஏமாற்ற வேளையில் செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் தங்கம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை வாங்கி அவற்றை மலேசியாவிற்கு திரும்ப கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பணவியல் ஆணை அதிகாரிகள் போல மோசடி செய்ய போலியான நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
மோசடி செய்யப்பட்ட நிதியை சேகரிக்கும் போது அவருடைய அடையாளத்தை மறைப்பதற்காக அவர் ஒரு விக் அணிந்திருந்தார். இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த வருமானத்தை மற்றவர்கள் தக்கவைத்துக் கொள்ள உதவும் வேலையில் உடந்தையாக இருந்த நபர் மீது இன்று (மே 2) குற்றம் சாட்டப்படும் என காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றங்கள் கடந்த ஆண்டு(2025) டிசம்பர் 30ஆம் தேதி முதல் மோசடி செய்பவர்கள் குறைந்தபட்சம் ஆறு முதல் அதிகபட்சம் 24 பிரம்படிகள் எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. மோசடி செய்தல் அதன் மூலம் கிடைத்த பணத்தை கையாள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
மேலும் இதற்கு உதவுவதையும் உடனடியாக இருப்பதையும் தடுப்பதற்காக பண செலவை குற்றங்களில் ஈடுபடுபவர்களுடைய வங்கி மற்றும் அலைபேசி தொடர்பு சேவைகள் முடக்கப்படும் எனவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு (2026) மார்ச் மாதம் முதல் மோசடி கும்பல்களுக்கு பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொடுத்து உதவியதற்காக கைது செய்யப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.