வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!
சிங்கப்பூர்:மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்கள் 15 மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரர்கள் பாதுகாப்புடனும்,மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் சிங்கப்பூரர்களை கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், லெபனான், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், சவுதி அரேபியா, இஸ்ரேல், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற 15 மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயண அறிவிப்புகள் அல்லது பயண ஆலோசனைகளை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.
இந்த நாடுகளில் தற்போது தங்கி இருக்கும் சிங்கப்பூரர்கள் தங்களது இருப்பிடத் தகவல்களை வெளியுறவு அமைச்சகத்தின் மின்னணு பதிவு முறையின் மூலம் உடனடியாக பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் விரைந்து உதவி வழங்கும் நோக்கில் இந்த பதிவு அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நிலைமை மோசமடையும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் உள்ள குடிமக்கள் அங்குள்ள அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் அருகிலுள்ள சிங்கப்பூர் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும், 24 மணி நேர அவசர உதவி சேவையும் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பே முதன்மை என்பதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.