சிங்கப்பூரின் கெட்டாய் கலாச்சாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியா?

சிங்கப்பூரின் கெட்டாய் கலாச்சாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருகாலத்தில் துடிப்பான அடிமட்ட மக்களின் உற்சாகமான பொழுதுபோக்காக இருந்த
கெட்டாய் (Getai), இன்றைய இளைய தலைமுறையோடு தொடர்பு கொள்ள சிரமப்படுகின்றது.

20 வயதான தேசிய சேவையாளர்கள் லீ யோங்சியன், லிம் வெய்ரோங், லியு ஜிடியன் ஆகியோர், கெட்டாயில் பாடப்படும் பாடல்கள் தங்களுக்கு தொடர்பில்லாதவை என்றும், பெரும்பாலும் இளைஞர்கள் ஆங்கிலம் அல்லது சீன பாப் இசையையே கேட்பார்கள் என்றும் தெரிவித்தனர். “பார்ட்டி செல்ல விரும்பினால் செல்வேன், தனியாக போகமாட்டேன்” என்று ஒருவர் நகைச்சுவையாகச் சொன்னார்.

சிலர் இளைஞர்களை ஈர்க்க இளம் பாடகர்கள் பிரபல டிக் டாக் நட்சத்திரங்கள் இலவச உணவு போன்ற அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

ஆனால் கெட்டாய் கலைஞர் லியூ லிங்லிங், “கெட்டாய் பேய் விழாவுக்கு மட்டும் அல்ல; கடவுள்களின் பிறந்தநாள், திருமணங்கள், தேசிய தினம் போன்றவற்றிலும் இது நடந்தது. இது சிங்கப்பூரின் நாட்டுப்புற கலாச்சாரத்தின் தனித்துவமான பகுதி. கெட்டாய் இல்லையென்றால் முதியவர்கள் தனிமையாகிவிடுவார்கள்” என்று கூறினார்.

ஆனாலும், அதிக செலவுகள்,இளைஞர்களின் ஆர்வமின்மை,ஆன்லைன் பொழுதுபோக்கு போட்டி காரணமாக கெட்டாய் குறைந்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள், எதிர்காலத்தில் நேரடி ஒளிபரப்புகள், ஸ்பான்சர்ஷிப்கள் இளம் பாடகர்களின் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் கெட்டாயை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

“காலத்துக்கு ஏற்ப மாறாவிட்டால் கெட்டாய் மறைந்து விடும்” என்பதே கலாச்சார ஆர்வலர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan