சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸில் அக்டோபர் 28.10.25 மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு லாரி சறுக்கி தெருவில் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் தெரிவித்ததாவது, மாலை சுமார் 5 மணி 10 நிமிட அளவில் உட்லேண்ட்ஸ் அவென்யூ 7 மற்றும் உட்லேண்ட்ஸ் அவென்யூ 4 சந்திப்பில் ஒரு லாரி விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்தது.
விசாரணையில், லாரி சறுக்கி விழுந்ததில் 60 வயது ஆண் ஓட்டுநர் ஒருவர், 49 வயது ஆண் பாதசாரி ஒருவர் மற்றும் 29 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, மூவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனையிலும், மற்றவர் உட்லேண்ட்ஸ் பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.