சிங்கப்பூரில் சீரியல் நம்பரால் சிக்கிய பணிப்பெண்..!! தண்டனை கிடைத்ததா..??

சிங்கப்பூரில் சீரியல் நம்பரால் சிக்கிய பணிப்பெண்..!! தண்டனை கிடைத்ததா..??

சிங்கப்பூர்: மியான்மரைச் சேர்ந்த 30 வயதான நான்ட் ஐ தண்டார் சோ என்பவர் 35 வயது பெண்ணின் வீட்டிற்கு சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார்.

தனது வீட்டை சுத்தம் செய்வதற்காக Helping என்ற நிறுவனம் மூலம் இந்த பெண்ணை வேலைக்க அமர்த்தியதாக தெரியவந்துள்ளது.

அந்த நிறுவனம் மூலம் வேலைக்கு வந்த அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த மே மாதம் அவரது பையில் இருந்த பணம் காணாமல் போனதை வீட்டு உரிமையாளர் கவனித்துள்ளார். உடனே அங்கு வேலை பார்க்க வந்த பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் அதற்கு மறுநாளே அவரது வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார். அவர் தமது பையில் $50 நோட்டுகளை அவரை கண்காணிப்பதற்காக வைத்துள்ளார்.

அதில் வைத்துள்ள நோட்டுகள் மொத்தம் 20 ஆகும் மேலும் அவற்றின் தொடர் எண்களை உரிமையாளர் எழுதியும் வைத்துக் கொண்டுள்ளார்.

அந்தப் பணிப்பெண் வீட்டிற்கு வந்த சற்று நேரத்தில் உரிமையாளரின் பை திறந்திருப்பதை பார்த்தார் உடனே அவர் மூன்று நோட்டுகளை அதிலிருந்து திருடியுள்ளார். உரிமையாளர் கண்காணிப்பு கேமரா மூலம் அதை பார்த்து தெரிய வந்ததும் பணிப்பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனே பணிப்பெண் அவரிடம் இருந்த நான்கு $50 நோட்டுகளை கொடுத்துள்ளார். அதில் மூன்று நோட்டுகளின் தொடர் எண்களை சரிபார்த்து அந்த நோட்டுகள் வீட்டு உரிமையாளர் உடையது என கண்டுபிடித்துள்ளார்.

இது தெரிந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறை விரைந்து வந்த பணிப்பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர் வேலை செய்த வீட்டில் பணத்தை திருடிய குற்றத்திற்காக பணி பண்ணிருக்க இரண்டு வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் இந்த குற்றத்திற்காக பணிப்பெண்ணிற்கு அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK