மலேசிய நபர் சிங்கப்பூரில் கைது..!! ஏன்.?? எதற்கு..??
சிங்கப்பூர்:க்ராடோம் எனப்படும் இயற்கை மருந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் திரவ பாட்டிலை சிங்கப்பூருக்குள் கடத்தியதாக, 37 வயது மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இம்மாதம் 14 ஆம் தேதி துவாஸ் சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில், குடிவரவு அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை நிறுத்தி, அறிவிக்க வேண்டிய பொருட்கள் உள்ளனவா என்று கேட்டனர். அவர் “இல்லை” என கூறியபோதும், சோதனை நடவடிக்கையின் போது அவரது உடைமைகளில் க்ராடோம் திரவம் போன்ற பாட்டில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, Kratom இல் காணப்படும் மிட்டராஜினைன் (Mitragynine) மற்றும் 7-ஹைட்ராக்ஸிமிட்டரஜினைன் (7-Hydroxymitragynine) ஆகிய இரண்டுவும் சிங்கப்பூரில் வகுப்பு A கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களாகும்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, Kratom இல் காணப்படும் மிட்டராஜினைன் (Mitragynine) மற்றும் 7-ஹைட்ராக்ஸிமிட்டரஜினைன் (7-Hydroxymitragynine) ஆகிய இரண்டும் சிங்கப்பூரில் வகுப்பு A பிரிவில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களாகும்.
இந்த வழக்கு தற்போது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு(CNB) மேலதிக விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐந்து பிரம்பு தண்டனைகள் விதிக்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.