மின் சிகரெட் விற்றதால் மலேசிய ஆடவருக்கு தண்டனை விதிப்பு..!!

மின் சிகரெட் விற்றதால் மலேசிய ஆடவருக்கு தண்டனை விதிப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள கிடங்குகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் சிகரெட் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களை குற்றத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த 21 வயது சோங் ஜூன் கியோங் விற்பனை செய்வதற்காக வைத்திருந்துள்ளார்.

இதனை ஜூலை மாதம் சுகாதார அறிவியல் ஆணை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் மூலம் தெரிய வந்ததால் அந்த நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்த அவர் பீஷான், உபி ஆகிய வட்டாரங்களில் இருக்கும் மின் சிகரெட் கிடங்குகளில் வேலை செய்து வந்ததாக அதிகாரிகள் விசாரணையின் போது பெரியவந்துள்ளதாக கூறினர்.

சோங் என்பவர் கிடங்குகளில் மின் சிகரெட்டுகளை பொட்டலம் செய்து விற்பதற்காக விநியோகம் செய்யும் ஓட்டுனர்களிடம் கொடுப்பார் அவர் பார்த்த மூன்று விநியோக ஓட்டுனர்களில் இரண்டு பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்றும் சோங் கூறினார்.

இதற்கு முன்பாக மலேசியாவில் வேலை செய்த என்னை ஜான் என்பவர் இந்த வேலையில் சேர்த்து விட்டதாக அவர் கூறினார்.

மின் சிகரெட் விற்பனைக்கு உதவுவதற்கு ஒரு கும்பலே இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விற்பனைக்காக மின்சவிரட்டுகளை வைத்திருந்த போது கையும் களவுமாக சம்பவ இடத்திலேயே பிடிபட்டார். இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK