MyTransportSG செயலி பாதிப்பு..!! விளக்கம் அளித்த LTA..!!
நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (ஏப்ரல் 18) மாலை 4:46 மணிக்கு முகநூலில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளது.
பேருந்தின் வருகை நேரம் ஆனது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியான நேரம் காட்டப்படவில்லை எனவும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மொபைல் செயல்களில் காட்டப்படும் பேருந்து வருகை நேரங்கள் குறிப்பிட்டுள்ளபடி பேருந்துகள் வராமல் சற்று தாமதமாக வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் மூலம் பேருந்து சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் பேருந்துகள் புறப்படும் எண்ணிக்கை வழக்கம் போல் உள்ளது என்றும் LTA விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பேருந்தின் துல்லிய வருகை நேர செயலியானது, சரிவர இயங்கவில்லை. மேலும் காட்டப்படும் நேரம் ஆனது துல்லியமற்றதாகவும் இது குறித்து LTA விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.