மனித வளத்தை மிகவும் திறமையாக நிர்வகிப்பதற்காக சாமான்களை கையாளும் செயல்பாட்டில் பல படிநிலைகளை குறைப்பதற்காகவும் உற்பத்தி திறனை குறைந்தது 15 விழுக்காடு அதிகரிக்கும் நோக்கத்துடனும் இந்த அமைப்பை செயல்படுத்த தொடங்கியது.
இந்த குழுமத்தின் சிங்கப்பூர் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லியு யோங்ஜி, விமானத்துறையின் எதிர்கால இயக்க சூழல் திறமையாளர்களுக்கான போட்டியை தொடர்ந்து எதிர்கொள்வதற்காக இந்த அமைப்பு இருக்கும் என்று கூறினார்.
“விமான இயக்க சூழலின் கண்ணோட்டத்தில் விமானத்துறை தொடர்ந்து பல சவால்களை எதிர்கொள்ளும் இது உண்மையில் நாம் நமது ஊழியர்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் நமது எதிர்காலத்திற்கு எப்படி தயாராவது என்பதை பற்றியது ஆகும்”.
நாட்டில் வளர்ந்து வரும் சரக்கு அளவை சமாளிப்பதற்காக மனித வளம் மற்றும் உபகரணங்களை சிறப்பாக கணித்து ஒதுக்க விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரவுகளை சேகரிப்பதற்கும் மற்றொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.