சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..?

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியாக புதிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தெரிவித்ததாவது, பயண நேரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், போதுமான பேருந்து ஓட்டுநர்களை நியமித்து தக்கவைத்துக் வைத்துக் கொள்வதும் முக்கியமான பணி என்று கூறினார்.
பேருந்து வலையமைப்பை மேம்படுத்துவது என்பது நிறைய வளங்கள் தேவைப்படும் ஒரு பணியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
புதிய பேருந்துகள் வாங்குதல், பணிமனைகள் கட்டுதல் மட்டுமல்ல நிலையான மனிதவள ஆதரவும் அவசியம் என்று கூறினார். மேலும் அவர் “ஒரு பேருந்து கேப்டனின் வேலை மிகவும் கடினம், பல உள்ளூர்வாசிகள் இதைச் செய்ய தயங்குகின்றனர்,” என கூறினார்.
சிங்கப்பூரில் தற்போது, மூன்றில் ஒரு பேருந்து ஓட்டுநர் மட்டுமே உள்ளூர் நபர்களாக உள்ளனர். இதை சமாளிக்க, சம்பளத்தை மேம்படுத்துவதோடு, இயக்கச் செலவுகளை கவனமாக சமநிலை செய்து வருவது அவசியம். இயக்கச் செலவுகள் அதிகமாகினால், சுமை இறுதியில் பயணிகள் அல்லது வரி செலுத்துவோருக்கே வந்து சேரும்.
அதே நேரத்தில், அரசு பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்து மிக நெகிழ்வான வேலை ஏற்பாடுகள்,பகுதி நேர வேலை, ஷிப்ட் விருப்பங்கள் போன்றவை வழங்கி வருகின்றது. இதன் மூலம், இல்லத்தரசிகள் மற்றும் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல் வேறுபாடுகளைக் கொண்டவர்கள் இந்த துறையில் சேர முடியும்.
முன்னேற்றங்கள் இருந்தாலும், இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கும் நிலை உள்ளது. உள்ளூர் பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பிற்கு குறைவாகவும், வயது அதிகமாகவும் உள்ளது. இளைஞர்களை இந்த துறையில் ஈர்ப்பது அவசியம் என்று கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள்,சிங்கப்பூர் ஆறு புதிய பேருந்து வழித்தடங்கள், ஐந்து நகர நேரடி சேவைகள் மற்றும் இரண்டு முன்னிலையிலுள்ள வழித்தடங்களின் நீட்டிப்புகள் செயல்படத் தொடங்கும். இதனால் பயணிகள் விரைவான மற்றும் வசதியான பயண வாய்ப்புகளை பெறலாம் என்று சியாவோ ஜென்சியாங் தெரிவித்தார்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
