சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது .

இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது.

சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அமைப்பில் 70 நிறுவனங்களைச் சேர்ந்த 2000 வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர்.

சிங்கப்பூரர்களின் மனதில் விண்வெளி என்பது எட்டா கனியென இருந்த நிலையில் அவை இப்பொழுது மாறி வானளவு வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கையை இந்த புதிய அமைப்பு தந்துள்ளது.

சிங்கப்பூர் விண்வெளி நிறுவனங்கள் ஆனது 10 கிலோ கிராமிலிருந்து 1000 கிலோகிராம் வரை உள்ள செயற்கைக்கோள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

விண்வெளி பொருளியல் என்பது உலகளாவிய நிலையில் துடிப்பு மிக்க துறையாக விளங்குவதால், $808 பில்லியன் இந்தத் துறையில் செலவிடப்படுகிறது.

இந்த செலவானது 2040 ஆம் ஆண்டிற்குள் $1.28 ட்ரில்லியனை எட்டுமென்று பல முன்னணி நிறுவனங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சிங்கப்பூரில் விண்வெளி ஆய்வுகளின் எதிர்காலம் தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்து இல்லாமல், மனித திறனையேச் சார்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK