சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா?
சிங்கப்பூர்: சிங்கப்பூர் போஸ்ட், அமெரிக்கா சிறிய பார்சல்களுக்கு முன்பு வழங்கிய விலையில்லா அனுப்பும் சலுகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து, சில்லறை வாடிக்கையாளர்களுக்கான புதிய பார்சல் டெலிவரி சேவையை நாளை (15.09.25) இருந்து தொடங்குகிறது.
இந்த சேவை, கார்ப்பரேட் பயனர்களுக்கான ஸ்பீட் போஸ்ட் நேரடி சர்வதேச சேவை விரிவாகும். வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் புதிய சுங்க விதிகளுக்கேற்ப இணக்கமான டெலிவரி சேனல்களைப் பெற முடியும்.
விலை விவரங்கள்:
💠 0.5 கிலோ வரை உள்ள உறைகள்-S$29
💠 2 கிலோ வரை உள்ள அட்டைப்பெட்டிகள்-S$69
👉 வரி மற்றும் சுங்கம் சேர்க்கப்படவில்லை.தபால் அலுவலர்கள் தேவையான உதவிகளை வழங்குவர்.
2 கிலோகிராம் மேல் எடை அல்லது US$100 மேல் மதிப்புள்ளவை ஸ்பீட்போஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
🔶️ எக்ஸ்பிரஸ் சேவை: 3–6 வணிக நாட்களில் டெலிவரி
🔶️ நேரடி சர்வதேச சேவை: 5–8 வணிக நாட்களில் டெலிவரி
அடிக்கடி அனுப்புபவர்கள் மற்றும் பல்வேறு அளவிலான பார்சல்களுக்கு, நிறுவனர் கணக்கு திறந்து தனிப்பட்ட கணக்கு மேலாளரின் உதவியுடன் அனுப்ப பரிந்துரைக்கப்படுகிறது.