இன்று முதல் சிங்கப்பூரில் நியூ அப்டேட்..!!!

இன்று முதல் சிங்கப்பூரில் நியூ அப்டேட்..!!!

சுகாதார அறிவியல் ஆணையமும் சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மருத்துவ தொழில்நுட்ப தொழில் குழுவும் இணைந்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உள்ளது.

எந்த துறைக்காக?
உள்ளூர் மருத்துவ தொழில்நுட்ப துறைக்காக இந்த அமைப்பை உருவாக்க உள்ளது.

இதன் மூலம் இரு தரப்பினருக்கும் ஹாங்காங் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் SME மையத்தின் சேவை வளங்களையும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் உடைய சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை குழுவின் புதுமை அலுவலகத்தின் தொழில்நுட்ப ஒழுங்குமுறை திறன்களையும் ஒன்றிணைத்து ஆலோசனை செய்திகள் மற்றும் வழிகாட்டுதல்களை தொழில்துறைக்கு வழங்குவார்கள்.

உள்ளூர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிப்பு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திட்டமிடலில் ஆரம்ப கட்டங்களில் இருந்து நிபுணர் அவர்களின் வழிகாட்டுதலை பெற முடியும்.

இதனால் செயல்முறையை நெறிமுறைப்படுத்தி தயாரிப்பு வெளியீட்டை மேலும் துரிதப்படுத்த இயலும்.

மருத்துவ தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தொடர்புடைய நிறுவனங்கள் தொழில் முறை மேம்பாட்டு படிப்புகளை தொடங்கவும் உதவியாக இருக்கும்.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் நிபுணர்கள் பாடநெறி விறையாளர்கள் மற்றும் ஆலோசகர்களாகவும் பணியாற்ற தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை மற்றும் தொழில் துறை நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ள உதவுவார்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK