சிங்கப்பூர் போட்டி தன்மை, பயனீட்டாளர் ஆணையம் பேரங்காடிகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் அடிப்படை விலையை காட்டும் முறை அறிமுகப்படுத்த உள்ளது.
பேரங்காடுகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் Unit Price எனப்படும் அடிப்படை விலையை காட்டும் முறையை சோதித்து பார்க்க இருக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து NTUC FairPrice, Sheng Siong, Prime Supermarket, Cold Storage, Giant பேரங்காடிகளில் இந்த திட்டம் தொடங்கப்படும்.
அரிசி, மாமிசம், முட்டை, சமையல் எண்ணெய், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருள்களுக்கு 8 வாரங்களுக்கு அடிப்படை விலை காட்டப்படும்.
இத்தகைய பொருள்களுக்கான விலை இன்னும் வெளிப்படையாக தெரிய வேண்டும். அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பொருள்களை உணர்ந்து வாங்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது என ஆணையம் கூறியுள்ளது.