சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!!

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் டெர்மினலுக்கு இனி நேரடி டாக்சி சேவை எளிதாக கிடைக்க உள்ளது. வரும் வியாழக்கிழமை (25.09.25) முதல், பயணிகள் எந்த உள்ளூர் இடத்திலிருந்தும் கம்ஃபோர்ட்டெல்குரோ டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.

இந்த சேவைக்கான நிலையான ஒரு வழி கட்டணம் $80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி ஸ்டாண்டிலிருந்து புறப்படுவோருக்கு $60, விமான நிலையத்திலிருந்து பயணிக்க விரும்புவோருக்கு $120 எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்ய 6552 1111 என்ற எண்ணை பயணிகள் அழைக்கலாம்.

எல்லை தாண்டிய டாக்சி சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து சமீபத்தில் சிங்கப்பூர் அரசு, டாக்ஸி ஆபரேட்டர்களும் தனியார் வாடகை கார் சங்கங்களும் கலந்துரையாடினர். இதில், எதிர்காலத்தில் டாக்சி முன்பதிவு செய்யும் ஆன்லைன் தளம் அறிமுகப்படுத்தப்படுவதற்கான திட்டமும் பேசப்பட்டது.

ஆனால், மலேசியாவில் அதிக டிராப்-ஆஃப் புள்ளிகள் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு, அது மலேசிய தரப்பின் ஒப்புதலைப் பொறுத்தது என அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதற்கான கலந்தாலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மலேசிய அதிகாரிகள் சட்டவிரோத எல்லை தாண்டிய தனியார் ஹெயில்லிங் சேவைகளை ஒடுக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத எல்லை தாண்டிய மற்றும் பாயிண்ட்-டு-பாயிண்ட் சேவை வாகனங்களுக்கு சட்டப்பூர்வ உரிமங்கள் மற்றும் காப்பீட்டு பாதுகாப்பு இல்லை என்று அதிகாரிகள் எச்சரித்தனர். விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு கிடையாது என்பதோடு, இந்த வாகனங்கள் உள்ளூர் டாக்சி மற்றும் தனியார் கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன என்றும் தெரிவித்தனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

 

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.