உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பிடித்த இடம்..??
உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசை பட்டியலை கேலப்பின் 2024 உலகளாவிய பாதுகாப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் உள்ள நாடுகளில் குறைந்துள்ள குற்ற விகிதம், பயனுள்ள சட்ட அமலாக்கம் மற்றும் சமூக ஒழுங்கை பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையாக இந்த உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2006 முதல் இந்த பட்டியல் ஆனது வெளியிடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு, கேலப் இந்த கணக்கெடுப்பை நேருக்கு நேர் மற்றும் தொலைபேசி மூலம் பொதுமக்களிடம் நேர்காணல்களை பயன்படுத்தி 144 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நடத்தியுள்ளது.
நேர்காணல்களில் பதில் அளித்தவர்கள் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆவர்.இதில் பங்கேற்பாளர்கள் 1,000 பேர் இருந்தனர்.
இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் 12-வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. ஆய்வுகளின் முடிவுகள் 94 விழுக்காட்டினருக்கும் அதிகமாக சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் தகவலின் படி பாதுகாப்பு உணர்வு மாறாமல் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளி உள்ளது என்பதையும் இந்த தரவின் மூலம் தெரிகிறது. மேலும் 98% ஆண்களும் 97% பெண்களும் இரவில் எந்தவித பயமின்றி தனியாக நடப்பதற்கு பாதுகாப்பாக உள்ள நாடாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது.
கணக்கெடுப்பின் மூலம் 98% குடியிருப்பாளர்கள் சிங்கப்பூரில் இரவு நேரங்களில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கூறியுள்ளனர்.
2006 முதல் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு வரை சார் தரவரிசை படுத்தப்பட்ட முதல் 10 நாடுகளில் பாதி சவுதி அரேபியா, ஓமன், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலை சேர்ந்தவை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்கள் இரவு நேரங்களில் எந்தவித அச்சமும் இன்றி பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்துள்ளனர்.
சிங்கப்பூரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் ஆசிய பசிபிக், மேற்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்காவின் முன்னுதாரணமே ஆகும். இந்த நாடுகளில் 50 சதவீதம் பேர் இரவில் பாதுகாப்பாக பயணம் செய்வதை உணர்ந்ததாக கணக்கெடுப்பின் போது கூறியுள்ளனர்.
கலவரங்கள், நிச்சயமில்லாத மோதல்களுக்கு மத்தியிலும் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் பாதுகாப்பான வாழ்க்கை சூழல்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக பாடுபட்டு வருகின்றன என கேலப் தலைவர் ஜான் கிளிஃப்டன் கூறியுள்ளார்.
பாதுகாப்பு என்றால் வன்முறையிலிருந்து விலகி உள்ளது மட்டுமல்லாது சமூகத்தின் உடைய நம்பிக்கை மேலும் பொது மக்களுடைய பாதுகாப்பை பிரதிபலிக்கும் விதமாக இருப்பது என்று கூறியுள்ளார்.