தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) குழந்தைகள் கல்விக்கான பிரைட் ஹொரைசன்ஸ் நிதி மற்றும் ஹெல்த் ஃபார் லைஃப் நிதி ஆகிய இரண்டும் ஏற்கனவே உள்ள அறக்கட்டளை நிதிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக இன்று (ஏப்ரல் 9) NTUC சமூக நீதி தொடங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $500 மில்லியன் திரட்டும் நோக்கத்துடன் ஒரு புதிய சமூக நிதி நிறுவப்பட்டிருக்கிறது.
குறைந்த வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மேலும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதையும் அதே வேளையில் முதியோர்களுக்கான பராமரிப்பை வலுப்படுத்துவதையும் சமூக நிதி தனது முதன்மை நோக்கமாக கொண்டிருக்கிறது என NTUC தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு (2026) குழந்தை வளர்ச்சி மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் NTUC சுமார் $12 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
குழந்தைகளை பொருத்தவரையில் தேவைப்படும் குழந்தைகளின் கற்றல் மற்றும் சமூக திறன்களை மேம்படுத்துவதற்காகவும் குடும்பப் பின்னணியால் வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ள குழந்தைகளையும் இந்த அறக்கட்டளை முன் பள்ளி கல்வி மற்றும் ஆரம்ப கால தலையீட்டிற்கு ஆதரவு அளிக்கும்.
முதியவர்களை பொருத்தமட்டில் பராமரிப்பு சேவைகள் மற்றும் நா சமூக நடவடிக்கைகளுக்கு நீதி கொடுப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்கு பழக்கமான சூழல்களில் அவர்களது முதுமை காலத்தை செலவிடவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் சமூகத்துடன் இணைந்தும் இருக்கவும் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
தங்களது பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கம் வாய்க்குமா என்பது குறித்தும் குடும்பத்தில் உள்ள முதியவர்கள் முறையாக பராமரிக்கப்படுகிறார்களா என்பது குறித்தும் பல குடும்பங்கள் கவலைப்பட்டுக் கொள்வதாக NTUC பொதுச்செயலாளர் NG சீ மெங் தெரிவித்துள்ளார். இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இந்த நிதியானது நிறுவப்பட்டுள்ளது.
வரும் மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் குழந்தைகளின் எண்ணிக்கை 7,000 இலிருந்து 10,000 ஆகவும், முதியோர்களின் எண்ணிக்கை 2,000 இலிருந்து 3000 ஆகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது என NTUC கூறியுள்ளது.