பாதசாரியின் பாதுகாப்பு கேள்விக்குறியான சம்பவம்..!! வைரலான வீடியோ..!!!
சிங்கப்பூர்:Telok Blangah சாலையில் உள்ள ஒரு குறுக்கு வழியில், கார் ஒன்று நிற்கத் தவறியதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய பாதசாரி விபத்தில் சிக்கவிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Beh Chia Lor – Singapore Road என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளி,ஓட்டுநரின் அலட்சியமான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.01.26) நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்படாத போதிலும், பல இணையவாசிகள் ஓட்டுநரை கடுமையாக விமர்சித்து, போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சிலர் சாலை அமைப்பு மற்றும் பார்வை மறைவு காரணமாக இது திட்டமிட்ட செயல் அல்ல என வாதிட்டனர்.
ஆனால் பெரும்பாலானோர், குறுக்கு வழிகளில் ஓட்டுநர்கள் வேகத்தை குறைத்து, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே செல்ல வேண்டும் எனக் கூறி, இது ஒரு அதிர்ஷ்டவசமான தப்பித்தல் மட்டுமே என எச்சரித்துள்ளனர்.