சிங்கப்பூர் HDB குடியிருப்பில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் பரவும் புகைப்படம்..!!
சிங்கப்பூரில் ஒரு HDB குடியிருப்பு கட்டிடத்தின் மாடியில் அதிர்ச்சி ஊட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அந்த சம்பவமானது இணையத்தில் பரவி வருகிறது.
இணையத்தில் பரவி வரும் புகைப்படங்களில், வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் னெ சந்தேகிக்கபடும் ஒரு பெண் HDB குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் ஒரு சிறு குழந்தையை ஜன்னல் விளிம்பில் சாய்த்து வைப்பதே தெரிகிறது.
இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்தவர்கள் பதறிப்போய் வியர்த்துப் போய் உள்ளார்கள். “Complaint Singapore” என்ற முகநூல் குழுவில் இணையவாசி வருவர் இந்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு ஜன்னல் அருகே ஒரு சுண்ணாம்பு கட்டமைப்பை ஒரு குழந்தை பிடித்து தொங்கி கொண்டிருப்பது போல் தெரிகிறது. அதிலிருந்து சற்று நகர்ந்தாலே அந்த குழந்தை கீழே விழுந்து விடும் அளவிற்கு தொங்கிக் கொண்டிருந்தது.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட இணையவாசி அந்த பெண்ணும் குழந்தையும் எந்த மாடியில் இருந்தார்கள் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் புகைப்படத்தில் உள்ள ஜன்னல் விளிம்புகளின் எண்ணிக்கை வைத்து பார்க்கும் போது அவர்கள் குறைந்தபட்ச 3-வது மாடியில் இருப்பது போல தெரிகிறது.
புகைப்படத்தை பதிவிட்டவர் தான் புகைப்படக்காரர் அல்ல எனவும், இந்த புகைப்படம் இந்தோனேசிய வீட்டு பணிப்பெண்களுக்கான ஒரு குழுவில் பரவி வருவதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழுவில் இந்த புகைப்படத்தை வேறு யாராவது பார்த்தால் நீங்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அதிர்ச்சி சம்பவமானது அட்மிரால்டி பாசேஜில் உள்ள பிளாக் 468-ல் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் அந்தப் பணிப் பெண்ணின் அலட்சியம் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இது மிகவும் ஆபத்தானது உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்ற இந்த குழுவைப் பற்றிய தகவல்களையும் இந்த புகைப்படம் எங்கிருந்து கிடைத்தது என்பதையும் கூறுங்கள் எனவும் பல இணையவாசிகள் தங்களது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த காவல்துறைக்கு புகார் வந்திருப்பதாகவும், அவர்கள் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.