சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..??
தாய்லாந்து காவல்துறை வித்தியாசமான முறையில் செயல்பட்டு, திருட்டு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயது நபரை கைது செய்துள்ளது. சுமார் 64,000 அமெரிக்க டாலர் (S$81,000) மதிப்புள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த சமயப் பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டுச் சம்பவம் பேங்காக் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. விசாரணையின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர்.
குற்றவாளியை பிடிக்க போலீசார் அருகிலுள்ள புத்தர் ஆலயத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சிங்க நடனக் குழுவில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற உடைகளில் வேடமிட்டு, வேகமான இசையுடன் நடனத்தில் ஈடுபட்டனர்.
நடனம் நடந்து கொண்டிருந்த தருணத்தில், திடீரென ஒருவர் வேடத்தை கழற்றி பாய்ந்து சென்று சந்தேக நபரைப் பிடித்து கட்டுப்படுத்தினார்.