சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஹார்ட்லைன் தரவுகள், கடந்த ஆண்டு(2025) சிங்கப்பூரில் பதிவாகியுள்ள பறவைகளின் இறப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பறவை இறப்புகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக ஹார்ட்லைன் 2020 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியக மூலம் அமைக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் பறவைகள் உயிரிழப்பு குறித்த அதிகாரிகள் தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதாவது சுமார் 650 அறிக்கைகளை பெற்றுள்ளதாக தரவின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த தரவானது 2020ல் இருந்த எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் பறவைகள் கட்டிடங்கள் மீது மோதுவதாலும் அவற்றின் இறப்புகள் அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
பல பறவைகள் ஒன்றாக பறக்கும் பொழுது பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடி ஜன்னல்களை கடந்து செல்லும்போது தவறாக நினைத்து அதில் மோதி காயம் ஏற்படவும் அல்லது இறப்பதற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அருங்காட்சியகம் சுட்டிக்காட்டி உள்ளது.
பெரும்பாலும் பறவைகள் விபத்து ஆவதற்கு ஜன்னல் விபத்துக்கள் மூலமே ஏற்படுவதால் அதிக நகரமயமாக்கப்பட்ட சூழலும் முக்கிய காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறவைகள் இறந்ததாக தெரிவிக்கப்படும் அதிகரிப்பானது பொதுமக்களிடம் சற்று விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுள்ளது என்பதை அருங்காட்சியகம் சுட்டிக்காட்டி உள்ளது.