சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!!
ஈஸ்ட் கோஸ்டில் உள்ள MindChamps பாலர் பள்ளியின் ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டது என சென்ற மாதம் (ஜூலை 2025) 15 ஆம் தேதி ஒரு அமைப்பு கூறியது.
பாலர் பள்ளி ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டு இருப்பதால் தோ பாயோ, ஈஸ்ட் கோஸ்டில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்ற தகவலை தொற்றுநோய் தடுப்பு அமைப்பு நேற்று(ஆகஸ்ட் மாதம்) 13 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்டில் உள்ள MindChamps பாலர் பள்ளியின் மாணவர்களுக்கு நேற்றும் (13 ஆம் தேதி) தோ பாயோவில் உள்ள MapleBear பாலர்பள்ளியின் மாணவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமையும் (14 ஆம் தேதி) உடல் சோதனை மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அணுக்கமாகவும் நீண்ட நாள் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். எத்தனை மாணவர்களுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து தகவல்களை வெளியிடவில்லை.
நோய்வாய்ப்பட்ட ஊழியருக்குத் தற்போது சிகிச்சை நடைபெறுவதாகவும் அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் சீரான நிலையில் இருக்கிறார் என்றும் அமைப்பு கூறியுள்ளது.