இந்த மாதம்(ஆகஸ்ட்) 5 – ஆம் தேதி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணி முதல் 6:50 மணி வரை உட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள லாரி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி மற்றும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை சோதனை சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் இந்த வாகனங்களில் புகையிலை வேண்டுவதை கண்டறிந்ததாகவும் அதிகாரிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.
கடத்தப்பட்ட புகையிலை காரின் பெட்டிகள், பின் இருக்கை மற்றும் உதிரி டயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு மணி நேரத்திற்குள் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் நாட்டிற்குள் மெல்லும் புகையிலை கடத்தல் என்ற மூன்று வாகனங்களை வழிமறித்து, 1,300க்கும் மேற்பட்ட மேலும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தது.