கட்டுப்பாட்டை இழந்த செடான்..!!!CCTV-யில் பதிவாகிய அதிர்ச்சி தருணம்..!!

கட்டுப்பாட்டை இழந்த செடான்..!!!CCTV-யில் பதிவாகிய அதிர்ச்சி தருணம்..!!

சிங்கப்பூர்:செராங்கூன் சென்ட்ரல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்து நடந்தது.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

73 வயதான ஆண் ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உதவி வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நெடுஞ்சாலை விபத்துகள் முகநூல் பக்கத்தில் வெளிவந்த காணொளியில், பிரேக் விளக்குகள் ஏரிந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் சாய்வுப் பாதையின் முன்பாக இருந்தது.

அதே நேரத்தில்,ஒரு வெள்ளி நிற செடான் கார் கட்டுப்பாட்டை இழந்தபடி சாய்வுப் பாதையில் வேகமாக இறங்கி,அந்த வாகனத்தின் வலது பக்கத்தில் நேரடியாக மோதியது.

இந்த அதிரடி மோதல் காரணமாக,நின்ற வாகனம் முன்னோக்கிச் சென்று அருகில் இருந்த மேலும் இரண்டு வாகனங்களைத் தாக்கியது.

முதன்முதலில் மோதிய ஓட்டுநர் உடனடியாக காரில் இருந்து இறங்கி நிலைமையைப் பரிசோதித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK