புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!!

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!!

சிங்கப்பூர்: புங்கோலில் உள்ள ஒரு சந்திப்பில் திடீரென சாலையின் நடுவே ஒரு கார் திடீரென கவிழ்ந்தது. காரின் உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள் பலரும் காரின் கண்ணாடிகளை உடைக்க முயற்சி செய்தனர்.

நேற்று (ஜூன் 9) இரவு சுமார் 8:00 மணி அளவில் எட்ஜ்ஃபீல்ட் மற்றும் புங்கோல் டிரைவ் சந்திப்பில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த காணொளியானது சிங்கப்பூர் சேனல் என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த பதிவில் நேற்று (ஜூன் 9) இரவு சாலையில் ஒரு கருப்பு செடான் கார் கவிழ்ந்ததில் அருகில் இருந்த நடுப்பகுதி சேதமடைந்து அந்த இடம் அலங்கோலமாக காட்சியளித்தது.

இந்த சம்பவத்தை 10 அவர்களுக்கும் மேற்பட்டோர் நேரடியாக பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிங்கப்பூர் சாலை விபத்து என்ற மற்றொரு சமூக ஊடகப் பக்கமும் சம்பவத்திற்கு பிறகு நடந்த காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி உள்ளது.

அந்த காணொளிகளில் வாகனத்திற்குள் சிக்கிய யவர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் விரைந்து செயல்படுவது போன்ற காணொளி இடம் பெற்று இருந்தது. மேலும் சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தங்களது ஹெல்மெண்ட்களைப் பயன்படுத்தி முன்பக்க கண்ணாடியை உடைத்தும் உதைத்தும் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் உள்ளே இருந்தவர்களை விடுவிக்க அவர்களால் முயலவில்லை.

சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) இது குறித்த தகவலானது இரவு 8:15 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காருக்குள் மாட்டிக் கொண்டவர்களைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தபோது மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாக SCDF இவர்கள் தெரிவித்துள்ளனர்

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK