அதிர்ச்சி..!!கழிப்பறையில் உயிருக்கு போராடிய NS வீரர்..!!

அதிர்ச்சி..!!கழிப்பறையில் உயிருக்கு போராடிய NS வீரர்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 23 வயது முழுநேர தேசிய சேவை வீரர் ஒருவர் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கழிப்பறையில் கிடந்தார்.

அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை (15.10.25) இரவு 9 மணியளவில், 328 பாசிர் பஞ்சாங்க் சாலையில் உள்ள ஒரு கழிப்பறையில் நடைபெற்றது.

காவல்துறையின் தகவல்படி, அந்த இடம் கூகிள் மேப்ஸ் படி ஒரு ஷெல் பெட்ரோல் நிலையமாகும்.

சம்பவ இடத்தில் அவரது சேவை ரிவால்வரும் மீதமுள்ள வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மற்ற எந்த காயங்களும் பதிவாகவில்லை.

 


முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், காயம் தானாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. காவல்துறை, கொலை என சந்தேகிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK