புக்கிட் பஞ்சாங் LRTயில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!!
சிங்கப்பூர்:புக்கிட் பஞ்சாங் எல்.ஆர்.டி ஃபஜார் (Fajar) நிலையத்தில், தனிநபர் நடமாட்ட சாதனத்தை (PMD) ஓட்டிச் சென்ற 64 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்தார்.பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்ததாவது, இந்தச் சம்பவம் இந்த மாதம் 19 ஆம் தேதி இரவு 9:35 மணியளவில் நடந்தது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
SMRT மெட்ரோ தலைமை நிர்வாக அதிகாரி லாம் ஹியூ கை கூறுகையில், சம்பவம் நடந்த உடனே ஊழியர்கள் அசாதாரண நிலையை கவனித்து, சிவில் பாதுகாப்புப் படைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.