செம்பவாங் சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

செம்பவாங் சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

சிங்கப்பூர்: நேற்று (நவம்பர் 29 ) காலை 10:55 மணி அளவில் செம்பவாங் சாலைக்கு செல்லும் வழியில் ( அட்மிரால்டி டிரைவ் பகுதியில்) ஒரு பேருந்து மிதிவண்டியின் மீது மோதியதில் மிதிவண்டி ஓட்டுநரான 39 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ பதிவில் பேருந்து மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு பேருந்தின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுனரான 41 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் காவல்துறையின் விசாரணையில் உள்ளார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து டவர் டிரான்சிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK