சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவு..!! பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் லசாடா, கரோசல் மற்றும் ஷாப்பி ஆகிய மின் வர்த்தக கடைகள் தற்காலிக கூடார கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகள் விற்கப்பட்ட வருகின்றன.
இவற்றை வாங்கி உட்கொண்டவர்களில் மூன்று பேர் முட்டி வலி, எடை குறைப்பு ஆகியவற்றை சரி செய்வதற்காக ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு உள்ளனர்.
இதில் மிகவும் வலுவான சக்தி கொண்ட மேலும் தடை செய்யப்பட்ட மருந்து பொருட்கள் கலந்து இருந்த காரணத்தினால் மூன்று பேரும் பக்கவிளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் உயர் ரத்த அழுத்தம் தூக்கமின்மை போன்ற சிரமத்திற்கு ஆளானதாக தெரியவந்தது.
இது குறித்த சுகாதார அறிவியல் ஆணையம் சம்பந்தப்பட்ட ஊட்டச்சத்து மருந்து வகைகளான எபாட் அங்கின் துலாங், ஐ எம் எஸ் ஓ ஏ எம், ஐ அம் டி ஓ எக்ஸ் பி எம்(IM DO X PM), டியான்மா டுஷொங் ஷூஜிங் வான் போன்றவற்றை மருத்துவர் உடைய பரிந்துரை இல்லாமல் வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் என சுகாதார அறிவியல் ஆணையம் மார்ச் 18ஆம் தேதி அன்று பொது மக்களை எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளது.
இந்த மருந்துகள் குறித்து சோதனை நடத்தப்பட்ட போது அபாயம் ஏற்படுத்தக்கூடிய மருந்து பொருட்கள் என தெரிய வந்ததாக ஆணையம் செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மேலும் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகளில் சிபுட்ராமின் மருந்தும் அடங்கும்.
தடை செய்யப்பட்ட இந்த மருந்து பொருட்களை விற்கக் கூடாது என சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புகைப்படங்களை இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்ட மின் வர்த்தக கடைகள் அந்த பதிவுகளை அகற்ற வேண்டும் எனவும், இந்த மருந்து பொருட்களை விற்பவர்கள் மீது விசாரணை தொடர்கிறது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.