தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது.

தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது.

இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் ஆண்கள் அணியை வழிநடத்துபவர்: முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் விஷ்வா தேவா(25)

அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்த விஷ்வா பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார். அணி தலைவராக இருப்பது கடுமையான பணி மேலும் முதல் முறையாக சிங்கப்பூரை சேர்ந்த அணியினருக்கு பயிற்சி கொடுப்பது கூடுதல் சுமையையும் கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடி இருப்பதாகவும் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்திடம் அனுமதி கேட்டோம் போட்டியில் கலந்து கொள்வதற்கு கபடி அணிக்கு திறமை உள்ளது என்பதை எடுத்துக்காட்டியும் உள்ளோம் என்று விஷ்வா கூறியிருக்கிறார்.

கபடி விளையாடுவதில் வெளிநாட்டு ஊழியர்கள் மிகச் சிறந்தவர்கள் அவர்களுடனும் நட்பு ரீதியாக விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

கபடி விளையாட்டுகள் தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் இடம்பெற்றுள்ளது இதில் ஏழு பேர் குழு மற்றும் ஐந்து அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாக இருக்கும்.

கடந்த மாதம் (செப்டம்பர்) ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா உள்ளிட்ட அணிகளுடன் மோதி, அந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு வெண்கலப்பக்கம் கிடைத்துள்ளது.

அனைத்து உலக அளவில் கபடி போட்டியில் முத்திரை பதிக்க சிங்கப்பூர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களிடம் பிரபலமாக உள்ளான் கபடி போட்டியானது தற்போது பள்ளிகளிலும் பிரபலமாக தொடங்கிவிட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் கபடி அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது பெண்கள் அணியும் களத்தில் இறங்க உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK