சிங்கப்பூர் தேவாலயச் சம்பவம்..!! தொடர்புடைய நபர் யார்..???

சிங்கப்பூர் தேவாலயச் சம்பவம்..!! தொடர்புடைய நபர் யார்..???

சிங்கப்பூர்:செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொய் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக 26 வயது சிங்கப்பூரரான கோகுலநந்தன் மோகன் என்பவர் மீது இன்று(22.12.25) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவர் அந்த தேவாலயத்தில் தொண்டூழியராக பணியாற்றவர் என்று கூறப்படுகிறது.அந்தப் பொருளை அவரே தயாரித்து தேவாலய வளாகத்தில் வைத்ததாக போலீஸ் சந்தேகிக்கிறது.

மூன்று அட்டை சுருள்கள், கம்பிகள் மற்றும் கற்கள் பயன்படுத்தி வெடிபொருள் போல உருவாக்கப்பட்ட அந்தப் பொருளில் உண்மையான வெடிபொருள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனியாகவே செயல்பட்டதாகவும், இது சமயத்தை குறிவைத்த தாக்குதல் அல்லது பயங்கரவாதச் செயல் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மனநல பரிசோதனைக்காக 3 வாரம் தடுத்து வைக்கப்படுவார்.

மேலும் அவர் அடுத்த மாதம் ஜனவரி 12ஆம் தேதி நீதிமன்றத்திற்கு திரும்புவார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை,
5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK