சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!!

சிங்கப்பூர் - இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2005 ஆம் ஆண்டு முதன்முறை
‘குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வலுவான மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த நடத்தப்படுகிறது.

நேற்று (ஆகஸ்ட் 4) இந்திய ராணுவம் குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சியை ஏற்று நடத்தியது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் கேண்டன்மண்டில் கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சியானது நேற்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் தரப்பிலிருந்து சிங்கப்பூர்க் கவச படைப்பிரிவு, சிங்கப்பூரின் 42வது படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர்.

இந்தியத் தரப்பிலிருந்து 340வது இயந்திரமாக்கப்பட்ட பிரிவு, ஐ மெட்ராஸ் பிரிவு ஆகியவை பங்கு பெற்றது. இரு தரப்பினரும் நிபுணத்துவ முறையிலான பரிமாற்றங்களும் மற்றும் பாவனைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

இப்பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியை  தொடங்கி வைத்தவர் சிங்கப்பூர் ஆயுதப் படைத் துணைத்தலைமை அதிகாரி கர்னல் ஆண்டி குவேக் மற்றும் இந்திய ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஆவார்.

இந்நிறைவு விழாவின்போது சிங்கப்பூரின் துணை தலைமை கவச வாகன அதிகாரி கர்னல் ஆண்டி குவேக் கூறியதாவது:
✓”இந்திய இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் பகிர்ந்ததை நம் வீரர்கள் பாராட்டினர்.
✓அனுபவமிக்க மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் அந்தக் கற்றல் அமைந்திருந்தது.

சிங்கப்பூர் ராணுவமும் இந்திய ராணுவமும் 14 வது முறையாக இணைந்து ‘குருக்ஷேத்திரா போல்ட்’ ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு நேற்று(ஆகஸ்ட் 4, 2025) பயிற்சியை நிறைவு செய்தது.

இந்த இரு நாடுகளும் 60 ஆண்டுகால அரசதந்திர உறவை நிறைவு செய்யும் நேரத்தில் இப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan