ஹாங்காங் தீ விபத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்த இரங்கல்..!!
ஹாங்காங் நகரில் உள்ள குடியிருப்பில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 26, 2025) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த தீ விபத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலரை காணவில்லை
இந்த துயரமான சம்பவத்திற்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் அவர்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக ஹாங்காங்கிற்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் தீ விபத்தில் உறவினர்களை பறி கொடுத்த குடும்பத்தினரையும் உயிர்களை மீட்க போராடிய முயற்சியில் காயமற்றவர்களையும் நினைவில் வைத்துள்ளதாக திரு லாரன்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் அரசின் சார்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக நேற்று (நவம்பர் 8)வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஹாங்காங் மக்கள் எப்பொழுதும் சவாலான காலத்தில் மிகவும் மன உறுதியுடன் இருந்துள்ளனர் மேலும் இந்த துயர சம்பவத்தில் இருந்தும் மன வலிமையுடனும் உறுதியுடனும் அவர்கள் மீண்டு வருவார்கள் என நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார் பிரதமர் லாரன்ஸ்.