சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி.!!12 பேர் சிக்கியது எப்படி..???
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் இணைந்து ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டு, எல்லை தாண்டிய மின்-சிகரெட் கும்பலை முறியடித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் S$560,000க்கும் அதிகமான மதிப்புள்ள மின்-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (16.10.25) நடைபெற்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 25–35 வயதுடைய 11 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இ-சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவும், விநியோகித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
அங் மோ கியோ அவென்யூ 5 அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் சட்ட அமலாக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேக நபர்கள் மின்-சிகரெட்டுகளை விநியோகிப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் அப்பர் ஜூரோங் சாலை, கான்பெரா டிரைவ் மற்றும் ஜாலான் செண்டுடோக் பகுதிகளில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டதில் இவர்கள் பிடிபட்டனர்.
இந்த குழுவினர் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக போலீசார் நம்புகின்றனர்.
இன்று (18.10.25) 12 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, மின் சிகரெட்டுகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதை மீறுபவர்களுக்கு S$1000 முதல்S$10,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு S$2000 முதல் S$20,000 வரைய அபராதம் அல்லது 12 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம்.