சிங்கப்பூர் காவல்துறையின் புதிய டிஜிட்டல் மாற்றம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசு தரவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொதுமக்கள் ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பயன்படுத்தவும், நாளை (08.09.25) முதல் காவல்துறையின் மின்னணு சேவைகளில் உள்நுழைவு முறையாக சிங்பாஸ் மற்றும் கார்ப்பாஸ் பயன்படுத்தப்பட உள்ளது.
இவை நாட்டில் பரவலாகப் பயன்படும் டிஜிட்டல் அடையாள அங்கீகார முறைகள் என்பதால், காவல்துறை இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.
ஆனால் சிங்பாஸ் கணக்கு இல்லாத வெளிநாட்டினர்கள், தங்கள் வெளிநாட்டு அடையாள அட்டை எண் அல்லது வாகனப் பதிவு எண் மூலம் அனுமதி சான்றிதழ் விண்ணப்பம், அபராதம் செலுத்தல் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம்.
சிங்பாஸ் அல்லது கார்ப்பாஸ் கணக்கு இல்லாதவர்கள், அவற்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் நேரடியாக கணக்கு பதிவு செய்யலாம். சந்தேகங்கள் இருந்தால், www.police.gov.sg/feedback, 1800 358 0000 ஹாட்லைன், அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகலாம்.
மேலும், இணையதளத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்காக, (07.09.25 இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மின்னணு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.