பயணம் செல்ல காரணம்? சிங்கப்பூர் – மெக்சிகோ உறவின் 50 ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதுதான் முதல் முறை பயணமா? 2016 ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் ஆன டோனி டான் மெக்சிகோவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
மெக்ஸிகோ – சிங்கப்பூர் வர்த்தக சங்கத்தில் தொடக்க விழாவில் சிங்கப்பூர் அதிபர் கலந்து கொள்வார். மேலும் இவருடன் சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளும் வர்த்தக தலைவர்களும் செல்கின்றனர்.
இரண்டு நாடுகளுடைய வர்த்தக உறவு மேலும் வலுவடைந்து இருக்கிறது கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11.6 பில்லியன் டெல்லி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
உலக பொருளாதாரமானது நிலையாக இல்லாததால் இரு நாடுகளும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த முயன்று உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக அதிநவீன உற்பத்தி மின்னிலக்க பொருளாதாரம். பசுமை நிதி ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் விரிவுபடுத்த இந்த வாய்ப்பின் மூலம் முடியும்.