நடுவானில் திடீரென நின்ற ரோலர் கோஸ்டர்..!! சிக்கிய பயணிகளின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர் (USS) பூங்காவில் ரோலர் கோஸ்டர் இயங்கி வருகிறது.
இந்நிலையில் திடீரென அந்த ரோலர் கோஸ்டர் பழுதடைந்து பாதியிலேயே நின்று விட்டது. இதில் பயணித்த 16 பயணிகள் மழையில் சிக்கிக் கொண்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து வீடியோ பதிவானது டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டது இதில் பாதி வழியில் நின்று போன ரோலர் கோஸ்டரில் இருந்த பயணிகள் கீழே இறங்கி நடந்து வருவது போல் இருப்பதை காண முடிந்தது.
இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (28/11/2025) மாலை 5 மணி அளவில் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா இடத்தில் நடந்துள்ளது.
“The Battlestar Galactica: Human vs Cyclone” என்ற ரோலர் கோஸ்டர் திடீரென பழுதாகி உள்ளதாக Resorts World Sentosa நிர்வாகமானது தெரிவித்துள்ளது மேலும் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் பத்திரமாக கீழே இறக்குவதற்கு பாதுகாப்பு குழு உதவியது எனவும் கூறியுள்ளது.
உடனேயே முழுமையாக நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் குழுவின் மூலமாக ரோலர் கோஸ்டர் பழுதுபார்க்கப்பட்டது.
பிறகு, நேற்று (29/11/2025) பழுது பார்த்த ரோலர் கோஸ்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் செயல்பட தொடங்கி விட்டது.
இந்த சம்பவத்திற்காக நிர்வாகமானது பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பயணிகளின் பொறுமையான காத்திருப்பு மற்றும் புரிதலுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.