சிங்கப்பூரின் செபானியா..!!யார் இவர்..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரின் செபானியா..!!யார் இவர்..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முழுநேர தேசிய சேவையாளரும் காவல்துறை அதிகாரியுமான செபானியா, சிங்கப்பூரின் முன்னணி வாள்வீச்சு வீரராகவும் பெயர் பெற்றுள்ளார்.அவர் தற்போது பயிற்சி கட்டளையில் டோஜோ உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் ஜூனியர் போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 32வது SEA விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.

தற்போது சிங்கப்பூர் ஓபன் மற்றும் பாரிஸ், கெய்ரோ, ஜப்பான், ஷாங்காய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

போட்டிகளில் அவர் வளர்த்துக் கொண்ட மன உறுதி, இராணுவ சேவையிலும் அவருக்கு பெரும் ஆதரவாக அமைந்தது. துப்பாக்கிச் சூடு சோதனையின் போது ஏற்பட்ட பதட்டத்தை சமாளிக்க அவரது போட்டி அனுபவமே துணைநின்றது என அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் “என்னை நம்பிய பெற்றோரும், மேலதிகாரிகளும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே என் இலக்கு” என்று கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan