சிங்கப்பூரில் SkillsFuture மோசடி புகார்..!!! காவல்துறை விசாரணை…!!

சிங்கப்பூரில் SkillsFuture மோசடி புகார்..!!! காவல்துறை விசாரணை...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் SkillsFuture அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக, Bossipaws எனப்படும் செல்லப்பிராணி உணவு நிறுவனம் ஒன்றின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக SkillsFuture Singapore அமைப்பும் தனிப்பட்ட முறையில் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SkillsFuture அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், தங்களை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வழங்குநர்களாக காட்டி விளம்பரம் செய்வது போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனால், எந்தவொரு பயிற்சி வகுப்பிலும் சேரும் முன், பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பயிற்றுவிப்பாளர்களும் உண்மையில் அங்கீகரிக்கப்பட்டவர்களா என்பதை சரிபார்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ஆரோக்கியமான, வீட்டிலேயே தயாரிக்கப்படும் செல்லப்பிராணி உணவுகள் என்ற பெயரில் Bossipaws நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், தங்களது வகுப்புகள் SkillsFuture அங்கீகாரம் பெற்ற பயிற்சிகளின் ஒரு பகுதியாகும் என விளம்பரம் செய்ததால், பலர் அந்த வகுப்புகளுக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பதிவு செய்த பின்னர், வகுப்புகளில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. SkillsFuture அங்கீகாரம் பெறுவதற்காக போதிய எண்ணிக்கையிலான பதிவுகள் தேவைப்படுவதாகவும்,அங்கீகாரம் கிடைத்தவுடன் செலுத்திய பணத்தை திருப்பித் தருவதாக உரிமையாளர் உறுதியளித்ததாகவும் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கையில் சிக்கியதாகக் கூறும் பலர், இணையம் மற்றும் WhatsApp செயலிகள் மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK