நண்பரின் விருந்துக்கு கைமாறாக சிகரெட் கடத்தல்... சிங்கப்பூரில் சீன இளைஞருக்கு 11 வாரங்கள் சிறை..!!

சிங்கப்பூருக்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தி வந்த 22 வயது சீன நாட்டவர் ஒருவருக்கு 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர் அடிக்கடி உணவு, மதுபானம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று செலவு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு உதவுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதான Zheng Jiajun என்பவர் தனது 28 வயது நண்பரான Zhang Xuexin உடன் இணைந்து, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து Zheng Jiajun-ன் பயணப் பொதியிலும் 30 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மீது செலுத்தப்பட வேண்டிய புகையிலை வரி S$3,534 எனக் கணக்கிடப்பட்டது.
இருவரிடமிருந்தும் மொத்தம் 65 அட்டைப்பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரும் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் Zheng Jiajun தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், நண்பரின் கடந்தகால உதவிகளுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் மட்டுமே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவரது தரப்பு வாதிட்டது.
மேலும், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி இல்லை என்பதையும், இளம் வயதுடையவர் என்பதையும் கருத்தில் கொண்டு குறைவான தண்டனை வழங்குமாறு கோரப்பட்டது.
ஆனால், நண்பர் வழங்கிய உணவு, பானங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் பணமல்லாத ஒரு வகையான பலனாகக் கருதப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
பணம் பெற்றுக்கொண்டு கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும், இத்தகைய சலுகைகளுக்காகச் செயல்படுபவர்களுக்கும் இடையே குற்றப் பொறுப்பில் பெரிய வேறுபாடு இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் 35 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளைக் கொண்டு வந்த Zhang Xuexin-க்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளையில், 30 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளைக் கொண்டு வந்த Zheng Jiajun-க்கு 11 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து Zheng Jiajun மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பருக்கு நன்றி செலுத்தும் நோக்கில் மேற்கொண்ட செயலே இறுதியில் சிறைத்தண்டனைக்கு வழிவகுத்துள்ளது இந்த வழக்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK