பொதுப் பூங்காக்களில் தூய்மையை நிலைநாட்ட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நீடித்த நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ விளக்கமளித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் பொதுப் பூங்காக்களில் குப்பை போட்ட 48 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இருவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் நடக்கும் இடங்களைக் கண்காணிக்க CCTV கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.