கிழக்கு சிங்கப்பூரில் திடீர் புகைமூட்டம்..!! காரணம்.??

கிழக்கு சிங்கப்பூரில் திடீர் புகைமூட்டம்..!! காரணம்.??

சிங்கப்பூர்: கிழக்கு சிங்கப்பூரில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.இதற்கு மலேசியாவின் ஜோகூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக இருக்கலாம் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில குடியிருப்பாளர்கள் எரியும் வாசனை ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில், மாலை நேரத்தில் PM2.5 துகள்களின் அளவு கணிசமாக உயர்ந்தது.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜோகூரின் பெங்கெராங், கோட்டா டிங்கி மற்றும் தஞ்சங் செடிலி பகுதிகளில் கண்டறியப்பட்ட தீப்புள்ளிகளிலிருந்து எழுந்த புகை,வடகிழக்கு காற்றின் காரணமாக சிங்கப்பூருக்குள் வந்திருக்கலாம்.

நேற்று இரவு காற்று தரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும், கிழக்கு பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் காற்று தரம் ‘நன்று’ என்ற நிலையிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காற்று தரம் குறித்த சமீபத்திய தகவல்களை myENV செயலி மூலம் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK