சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா 2026 – முழு வழிகாட்டி..!!

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா 2026 - முழு வழிகாட்டி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்து மக்களின் முக்கியமான ஆன்மிக திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பால் காவடி மற்றும் காவடிகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள்.

இந்தத் திருவிழா, Serangoon Road-ல் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கி, Tank Road-ல் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நிறைவு பெறுகிறது.

தைப்பூச ஊர்வலம் பொதுவாக நள்ளிரவுக்குப் பிறகு தொடங்குகிறது. பக்தர்கள் சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்து வழிபாட்டை நிறைவேற்றுவர். ஊர்வலத்தின் போது பக்தி பாடல்கள், விரத ஒழுங்குகள் மற்றும் ஆன்மிக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

பால்குடம், பால் காவடி மற்றும் காவடி எடுக்க விரும்பும் பக்தர்களுக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக http://thaipusam.sg என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு வழங்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். பதிவு முடிந்ததும் வழங்கப்படும் QR குறியீடு கோயில் நுழைவாயிலில் சரிபார்க்கப்படும்.

பால்குடம் மற்றும் பால் காவடி எடுக்கும் பெண்கள், குடும்பத்தினர், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் Gate 4 வழியாக நுழைய வேண்டும். இந்த நுழைவாயில் விநாயகர் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆண் பக்தர்கள் Race Course Road பகுதியில் உள்ள Gate 2 வழியாக கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

காவடி எடுக்கும் பக்தர்களுக்கும் இதே நுழைவுவிதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். பெண்கள் மற்றும் குடும்பத்தினர் Gate 4 வழியாகவும், ஆண்கள் Gate 2 வழியாகவும் நுழைய வேண்டும். ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பால்குடம் அல்லது காவடி செலுத்தும் பக்தர்கள் River Valley Road பக்கம் உள்ள நுழைவாயிலை பயன்படுத்த வேண்டும்.

பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வழிபாடு செய்யும் வகையில் தனிப்பட்ட வழித்தடங்கள் மற்றும் உதவி வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தங்களுடைய நேர ஒதுக்கீட்டிற்கு குறைந்தது 30 நிமிடம் முன்பே வந்து தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு உள்ளவர்கள் அதிக கவனத்துடன் நடந்து செல்ல வேண்டும்.
விழா நடைபெறும் பகுதிகளில் மது, புகையிலை மற்றும் இ-சிகரெட் போன்ற பொருட்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க அனைத்து பக்தர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேர ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், சிங்கப்பூரில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆன்மிக ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்படுவதால், பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK