சிங்கப்பூரை அதிர வைத்த வழக்கு...!!!தந்தையின் அருவருப்பான செயல்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனது சொந்த மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்கள் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த 46 வயது தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் 3 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2019 முதல் 2023 வரை பிரதிவாதி தனது மூத்த மகளுடன் பலமுறை உடலுறவு கொண்டார்.
மேலும் 2024 இல் தற்போது 23 மற்றும் 14 வயதுடைய தனது மகள்களை குளிப்பதை பலமுறை மறைமுகமாக படம் பிடித்தார்.
மூத்த மகளின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அவரது கைப்பேசியில் குளியலறை ரகசிய வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நேற்று (22 ஆம் தேதி) அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதியின் பெயர் உட்பட அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் எந்தத் தகவலையும் ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.