பணிப்பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 15 மாதக் குழந்தையை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயதான பணிப்பெண்ணுக்கு 22 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தூங்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில், பணிப்பெண் அந்தக் குழந்தையை தொடர்ந்து துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் தனது முதலாளியின் வீட்டில் குழந்தை பராமரிப்புப் பணியில் சேர்ந்துள்ளார். இரவு நேரங்களில் குழந்தைக்கு உணவு அளித்து தூங்க வைப்பது அவரது பொறுப்பாக இருந்தது.
குழந்தையுடன் ஒரே அறையில் அவர் தங்கியிருந்த நிலையில், அந்த அறையில் CCTV கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மார்ச் 20, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில், குழந்தை அமைதியின்றி தூங்க மறுத்தபோது பணிப்பெண் தனது பொறுமையை இழந்து குழந்தையை அடித்து, இழுத்து, முகத்தை கிள்ளி, தலையிலும் கழுத்திலும் உதைத்ததாக CCTV காட்சிகள் மூலம் தெரியவந்தது.