சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!! தாத்தாவிற்கு நீதிமன்றம் அளித்த கடும் தண்டனை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் நீதிமன்றம் இன்று(03.11.25)69 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர் தனது வயது குறைந்த வளர்ப்பு பேத்தியை ஒன்பது மற்றும் பத்து வயதிற்குள் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மொத்தம் 14 குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளை பிரதிவாதி ஒப்புக்கொண்டுள்ளார்.மீதமுள்ள குற்றச்சாட்டுகள் தண்டனை வழங்கும்போது பரிசீலிக்கப்படவுள்ளன.
வழக்கு விவரங்களின்படி, சிறுமியின் தந்தை 2010 முதல் சிறையில் உள்ளார்.தாயை ஒருபோதும் சந்திக்கவில்லை. சிறுமி பிறந்தது முதல் பாட்டியுடன் வாழ்ந்து வந்தார். 2008ல் பாட்டியை திருமணம் செய்த பிரதிவாதி, 2016 முதல் 2017 வரை சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
2019 டிசம்பரில் அவர் விவாகரத்து பெற்று வேலையை விட்டு விலகினார். 2020 ஜூலையில் சிறுமி தனக்கு தானே சுயதீங்கு செய்ய முயன்றபோது பள்ளி ஆலோசகர் வழியாக இந்தச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ உளவியலாளர்கள், பாதிக்கப்பட்ட சிறுமி அதிர்ச்சி மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளுடன் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டினர்.
நீதிமன்றத்தில் பிரதிவாதி, மலேசியாவில் உள்ள தனது குடும்பத்துடன் மீதமுள்ள ஆண்டுகளை செலவிட விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால் தீர்ப்பளிக்கும் போது நீதிபதி, பிரதிவாதியும் பாதிக்கப்பட்டவரும் இரத்த உறவினராக இல்லாவிட்டாலும் குடும்பமாக கருதப்படுவதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலையில் அவரைத் துன்புறுத்தியிருப்பது கடுமையான குற்றம் எனக் கூறினார்.